தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் முன்னணி தமிழ் திரைப்பட நடிகரான அஜித் குமார் தொடர்பான ஒரு தகவல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் லண்டன் பயணம் தமிழக முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ பயணம் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 16 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு முறை மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் லண்டன் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்: அதே காலகட்டத்தில், பிரபல நடிகரும் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ (MICHELIN LE MANS CUP) கார் பந்தயம் நடைபெறவுள்ளது.
லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் (Silverstone Circuit) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த சர்வதேச போட்டியில் அஜித் குமார் தனது AJITH REDANT RACING அணிக்காக பந்தயக் களத்தில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குகிறார்.
ஒரே இடத்தில் நட்சத்திரங்கள் – சந்திப்பு நிகழுமா? முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணமும், அஜித் குமாரின் சில்வர்ஸ்டோன் பந்தயமும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளதால், பந்தயத்தைக் காண முதலமைச்சர் நேரில் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அத்துடன், தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை த்ரிஷாவும் தற்போது லண்டனில் இருப்பதால், இவர்கள் அனைவரும் இணைந்து அஜித் குமாரின் போட்டியை நேரில் பார்வையிட வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
ரசிகர்கள் உற்சாகம் திரைத்துறையில் வெவ்வேறு தளங்களில் இயங்கி வந்தாலும், சர்வதேச பந்தயக் களத்தில் அஜித் பங்கேற்பதை விஜய் நேரில் பார்வையிட்டால், அது தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையும் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த இறுதித் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
