Homeசெய்திகள்சினிமாமறைந்த இசைக்கலைஞர் ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு!

மறைந்த இசைக்கலைஞர் ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு!

-

- Advertisement -

மறைந்த இந்தியத் திரையிசையின் புகழ்பெற்றப் பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசித் திரைப்படப் பாடலான ‘ஏ மேரி ஜிந்தகி’ (Ae Meri Zindagi), அவரது 93-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.மறைந்த இசைக்கலைஞர் ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு!

‘ஓம் கா ஹரி’ படத்தில் இடம்பெற்ற பாடல் இயக்குநர் ஹரீஷ் வியாஸ் இயக்கத்தில், ரகுபீர் யாதவ், அன்ஷுமான் ஜா மற்றும் சோனி ரஸ்தான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ (Om Ka Hari) என்ற இந்தித் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

we-r-hiring

ராஜீவ் சாரங் இசையமைப்பில், பிரதீப் சர்மா குஸ்ரோ எழுதிய இப்பாடலை, ஆஷா போஸ்லே 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது வசீகரிக்கும் குரலில் பதிவு செய்திருந்தார்.

ஸ்டுடியோ பதிவு காட்சிகளுடன் வெளியான வீடியோ இன்று யூடியூப்பில் வெளியான இப்பாடலின் வீடியோவில், மறைந்த பாடகி ஆஷா போஸ்லே ஸ்டுடியோவில் வைத்து இப்பாடலைப் பாடி பதிவு செய்த காட்சிகளும், படக்குழுவினருடன் அவர் உரையாடிய தருணங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலைக் கேட்டவுடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் உடனடியாகப் பாடச் சம்மதித்தேன் என்று ஆஷா போஸ்லே நெகிழ்ச்சியுடன் பேசும் பதிவும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

இசைப் பிரியர்கள் நெகிழ்ச்சி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தனது 92-வது வயதில் காலமான ஆஷா போஸ்லேவின் இந்தக் கடைசிப் பாடல், அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சிப் பெருக்கையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த ஆஷா போஸ்லேவின் குரலில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்

MUST READ