ரத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கண்ணன் நாராயணன் இசையிலும் அமர்நாத் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இப்படம் வருகின்ற செப்டம்பர் 28 இல் வெளியாக இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு நாள் எனும் முதல் பாடல் நாளை மாலை 5 (செப்டம்பர் 14) மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் இந்த பாடலை எழுதியுள்ளதும் பாடியுள்ளதும் பிரபல பாடகர் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது.