spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா தொடங்கியுள்ள ஸ்கின் கேர் பிசினஸ்!

நயன்தாரா தொடங்கியுள்ள ஸ்கின் கேர் பிசினஸ்!

-

- Advertisement -

சினிமாவில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள் பெரும்பாலும் சினிமா மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த ஒரு பிசினஸையும் நடத்தி வருகின்றனர். பல நடிகர்கள் உணவகங்கள், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பு, ஆடை நிறுவனங்கள், நகை தொழில், விளம்பரங்கள், மாடலிங் என தங்களுக்கு விருப்பமான துறைகளில் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த ஸ்கின் கேர் பிசினஸ் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். நயன்தாரா தொடங்கியுள்ள இந்த புதிய பிசினஸுக்கு திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஏற்கனவே நயன்தாரா சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் சாய் வாலே என்னும் தேநீர் வியாபாரத்திலும், வேதிப்பொருள் இல்லாத லிப் பாம் அழகுப் பொருள்களிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ