Homeசெய்திகள்சினிமாஅஜித் ரீமேக் செய்ய விரும்பிய படம்.... இயக்க முடியாத வருத்தத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர்!

அஜித் ரீமேக் செய்ய விரும்பிய படம்…. இயக்க முடியாத வருத்தத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர்!

-

- Advertisement -

பிரபல தெலுங்கு இயக்குனர் ஸ்ரீனு வைட்லா அஜித்தை இயக்க முடியாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நீ கோசம், தீ, தூக்குடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர்தான் ஸ்ரீனு வைட்லா. இந்தப் படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “பிசினஸ் மேன் படப்பிடிப்பு சமயத்தில் மகேஷ் பாபுவை சந்திக்க கோவாவில் ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்றபோது அதை விடுதியில் அஜித் தங்கி இருந்தார். இயக்குனர் சக்ரி டொலேட்டி, என்னை அஜித்திடம் அறிமுகம் செய்து வைத்தார். நான் இயக்கிய தூக்குடு படத்தை நடிகர் அஜித் பாராட்டினார். நீங்க இந்த படத்தை தமிழில் ரீமேக் பண்றேன்னு சொன்னா நான் நடிக்கிறேன் என்று கூறினார் அஜித். ஆனால் நான் அப்போது ஜூனியர் என்டிஆர் இன் பாட்ஷா பாட்ஷா படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகி இருந்ததால் என்னால் அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியவில்லை. அஜித்தை இயக்க முடியாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

MUST READ