spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

-

- Advertisement -

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் கேப்டன் மில்லர், வணங்கான் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேசமயம் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் டியர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் அடியே திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்க உள்ளன என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதேசமயம் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ