spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லியோ' டிரைலர் எப்போது?..... மிரட்டலான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

‘லியோ’ டிரைலர் எப்போது?….. மிரட்டலான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

-

- Advertisement -

லியோ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படங்களான கைதி, மாஸ்டர் விக்ரம் உள்ளிட்ட படங்கள் அதிக வசூல் வேட்டை நடத்தியதால் லியோ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் லியோ படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் லியோ படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், மன்சூர் அலிகான், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ