spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ.148 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனான லியோ

ரூ.148 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனான லியோ

-

- Advertisement -

லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் 148 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது ‘லியோ’. தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானது.
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லை பகுதி மற்றும் கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழக எல்லையில் 2 திரையரங்குகள், கேரளாவில் 655 திரையரங்குகளில் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாவட்டங்களில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 05.00 மணி காட்சி வெளியானது. ரசிகர்கள் மட்டுமன்றி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் படத்தை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்றனர்.

இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ள லியோ திரைப்படம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ