- Advertisement -
மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் பரோஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மோகன்லால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் வ்ருஷபா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது.
இதுமட்டுமன்றி, பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் 2 திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே, ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.



