Homeசெய்திகள்சினிமாசலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்... முன்பதிவு தொடக்கம்...

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்… முன்பதிவு தொடக்கம்…

-

- Advertisement -
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சலார் படத்திற்கு, தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் பிரசாந்த் நீல். இதில் யாஷ் நடித்திருப்பார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. உலகம் முழுவதும் வௌியான கேஜிஎஃப் 2 அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை புரிந்தது. அதுமட்டுமன்றி யாஷ் மற்றும இயக்குநர் பிரசாந்த் நீலை, இந்தியாவின் மாபெரும் நட்சத்திரங்களாக நிலை நிலைத்தியது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான்

we-r-hiring
இதைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு சலார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார். பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சலார் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி படத்திற்கு முன்பதிவும் தொடங்கி உள்ளது.

MUST READ