- Advertisement -
சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் என நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னட சினிமாவிலிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் பிரசாந்த் நீல். ஒரே திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்த்தை பிடித்தவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில், இரண்டாம் பாகம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.


ஹம்போலா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் இத்திரைப்படத்தில், பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இத்திரைப்படம் வரும் 22-ம் தேதி வெளியாகிறது.



