- Advertisement -
தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வௌியாகி ரசிகர்ளிடையே வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் குண்டுர் காரம். இது மகேஷ் பாபுவின் 28-வது படமாகும். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். நடிகர் மகேஷ் பாபு ஏற்கனவே, திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அத்தாடு, கலேஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது.




