Homeசெய்திகள்இந்தியா"மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை"- மாயாவதி திட்டவட்டம்!

“மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை”- மாயாவதி திட்டவட்டம்!

-

- Advertisement -

 

"மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை"- மாயாவதி திட்டவட்டம்!

2024 – ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம், மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதிக் கட்ட ஆலோசனையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனித்து போட்டியிடும் முடிவை கைவிட இந்தியா கூட்டணி வைத்த கோரிக்கையை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நிராகரித்தார். 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

2024-ல் தல பொங்கல் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

இந்தியாவிலேயே பெரிய மாநிலம் என்றழைக்கப்படும் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இந்த சூழலில், பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைசி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ