- Advertisement -
அண்மையில் ஏற்பட்ட எலும்பு முறியால் கடும் அவதிப்பட்ட நடிகர் அருண் விஜய், சிகிச்சையில் இருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அன்று முதல் இன்று வரை கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் நடிகர் அருண் விஜய். 90-களில் அவரது திரைப்பயணம் இன்று வரை வெற்றிப்பயணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் காதல் மற்றும் காமெடி படங்களில் ஆர்வம் செலுத்தி வந்த அருண் விஜய், அடுத்தடுத்து ஆக்ஷன் ஹீரோவாாக உருவெடுக்கத் தொடங்கினார். தடம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சினம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். யானை படத்தை ஹரி இயக்கினார். இதைத் தொடர்ந்து வணங்கான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன். ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கி இருந்தார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்தது. மலையாள நடிகை நிமிஷா சஜயன் மற்றும் ஆங்கில நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



