spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு தயாராகும் தமன்னா... ரசிகர்கள் உற்சாகம்..

திருமணத்திற்கு தயாராகும் தமன்னா… ரசிகர்கள் உற்சாகம்..

-

- Advertisement -
கோலிவுட் ரசிகர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் கனவுக்கன்னி தமன்னா என்றே கூறலாம். அவர் வடக்கிலிருந்து வந்தாலும், தெற்கே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தமன்னா. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்மூலம் அவர் கோலிவுட் திரைக்கு அறிமுகம் ஆகினார். இப்படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்தார். இருப்பினும் கேடி திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் பெரும் ஹிட் அடிக்கவே தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்து தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கும் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், வெங்கடேஷ், சிரஞ்சீவி என அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் பக்கம் தமன்னா கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.

நடிகை தமன்னா கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆன்மீக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வரவே, தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும, இதனால் அடுத்தடுத்து அவர் புனித தலங்களுக்கு செல்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ