Homeசெய்திகள்சினிமாஅரபிக்குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை கீர்த்தி ஷெட்டி

அரபிக்குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை கீர்த்தி ஷெட்டி

-

- Advertisement -
அரபிக்குத்து பாடலுக்கு பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடனமாடியிருக்கும் காணொலி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தெலுங்கில் இளம் வயதிலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் இந்தியில் சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். ஆனால், தெலுங்கில் கடந்த 2021-ம் ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி ஷெட்டி. இப்படத்தில் கீர்த்திக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கீர்த்தி ஷெட்டி. இதைத் தொடர்ந்து நானி நடிப்பில் ஷியாம் சிங்கா ராய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து பங்கராஜூ படத்தில் நடித்தார். அடுத்து லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழுக்கும் பிரபலமானார். இத்திரைப்படம் வரவேற்பை பெறாவிட்டாலும், புல்லட் பாடல், மூலமாக இவர் ஹிட் அடித்தார். அடுத்து தெலுங்கில் இரண்டு படம் நடித்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெங்கட் பிரபு இயக்கிய வாரியர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி.

தற்போது தமிழில் மட்டும் இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எல்ஐசி, மற்றும் ஜெயம்ரவியுடன் ஜீனி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், உலக அளவில் பிரபலம் அடைந்த அரபிக்குத்து பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி பெல்லி நடனம் ஆடிய காணொலி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ