Homeசெய்திகள்சினிமாஸ்ரீகாந்த் நடிக்கும் 'சத்தமின்றி முத்தம் தா'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘சத்தமின்றி முத்தம் தா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

ஸ்ரீகாந்த் நடிக்கும் சத்தமின்றி முத்தம் தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பார்த்திபன் கனவு, போஸ், உயிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நடிக்கும் 'சத்தமின்றி முத்தம் தா'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு! கடந்த சில வருடங்களாக ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்து அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் ஸ்ரீகாந்த் ராஜ்தேவ் எழுதிய இயக்கியுள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செலிபிரிட்டி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜுபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மதன் என்பவர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். யுவராஜ் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாகவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆசை மழை எனும் முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. ஸ்ரீகாந்த் நடிக்கும் 'சத்தமின்றி முத்தம் தா'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ