- Advertisement -
கோலிவுட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மெரினா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரேமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், டாக்டர், டான் என அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள அயலான் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்முவில் விறுவிறுப்பாக நடைபெற்றது.




