spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்..... பூஜை எப்போது?

இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்….. பூஜை எப்போது?

-

- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அடுத்தடுத்து பல பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராகி வருகிறார். இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்..... பூஜை எப்போது?அதன்படி ஏற்கனவே வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள தங்கலான் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். மேலும் சியான் 62, புறநானூறு போன்ற படங்களில் புறநானூறு போன்ற படங்களில் இசையமைப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதேசமயம் ஜிவி பிரகாஷ், பல படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் ரெபல், கள்வன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் கிங்ஸ்டன், இடிமுழக்கம், டியர் போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்..... பூஜை எப்போது?தற்போது இந்த புதிய படம் சம்பந்தமான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது அனுராக் காஷ்யப், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை வருகின்ற மே 14ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க இந்தி மொழியில் மட்டுமே உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மற்ற மொழிகளில் இந்த படத்தை டப் செய்து வெளியிடப்படவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஆகவே ஜிவி பிரகாஷ் இந்தியில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ