spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' டீசர் குறித்த அறிவிப்பு!

‘புஷ்பா 2’ டீசர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'புஷ்பா 2' டீசர் குறித்த அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம் புஷ்பா. புஷ்பா தி ரூல் என்ற தலைப்பில் வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் அல்லு அர்ஜுனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். 'புஷ்பா 2' டீசர் குறித்த அறிவிப்பு!இந்த படத்தின் அறிவுப்பு டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் ராஷ்மிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராஷ்மிகாவின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

we-r-hiring

அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் நாளை காலை 11.07 மணி அளவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ