spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம்... வெளியானது அதிரடி அறிவிப்பு...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம்… வெளியானது அதிரடி அறிவிப்பு…

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கிய சிவகார்த்திகேயன், சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். இதுவரை 5 திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். அவரது தயாரிப்பில் உருவான திரைப்படம் கொட்டுக்காளி.

இப்படத்தில் பிரபல நடிகர் சூரி நாயகனாக நடிக்கிறார். மலையாள நட்சத்திரம் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வானது என முன்னரே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்தபடம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. குரங்கு பெடல் என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. கலையரசன் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். கமல்கண்ணன் படத்தை இயக்குகிறார்.

MUST READ