

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு… தனுஷ் வைத்த கோரிக்கை…
அகமதாபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர் 20, ஷாய் ஹோப் 19, கேப்டன் ரிஷப் பண்ட் 19 ரன்களை எடுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் 31, சாய் சுதர்சன் 12, ராகுல் டெவாட்டியா 10 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.


