- Advertisement -
இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், நடிகர் தனுஷ் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் தொடங்கி டோலிவுட், பாலிவுட், அடுத்து ஹாலிவுட்டுக்கும் சென்று இன்று உலக சினிமாவின் நாயர்களில் ஒருவராக மாறியிருக்கும் வெற்றி கதாநாயகன் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ராயன் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
