spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி... கவனம் ஈர்க்கும் ட்ரைலர் வெளியீடு...

வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி… கவனம் ஈர்க்கும் ட்ரைலர் வெளியீடு…

-

- Advertisement -
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் மனுசி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரையில் காட்டி பெருமை இயக்குநர் வெற்றிமாறனுக்கு உண்டு. வழக்கமாக காதல், காமெடி என கமர்ஷியல் படங்களுக்கு மாற்றாக சாதிய அரசியல், கல்வி என சமூகத்திற்கு தேவையான் முற்போக்கான விஷயங்களை மையப்படுத்தி படம் உருவாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடித்திருப்பார்.

we-r-hiring
விடுதலை முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிமாறன் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் கொடி, அண்ணனுக்கு ஜே, உதயம் என்.எச்.4 உள்பட பல படங்களை தயாரித்து இருக்கிறார். இறுதியாக ஆண்ட்ரியா நடித்த அனல் மேலே பனித்துளி என்ற படத்தையும் தயாரித்தார். இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள புதிய திரைப்படம் மனுசி. கோபி நயினார் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இளையராஜா இப்படத்திற்க்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வௌியிட்டு உள்ளார்.

MUST READ