பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் ராம் சரண், கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் வலது கை மணிக்கட்டு காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். தற்போது அவர் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடிகர் ராம் சரணுக்கு அவரது வலது கை மணிக்கட்டில் ‘டி.எஃப்.சி.சி’ (TFCC – Triangular Fibrocartilage Complex) எனப்படும் சிக்கலான மற்றும் நீண்டகாலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் கடந்த ஜூலை 27 அன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை டிஸ்சார்ஜ்?
மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் ஓய்வில் இருக்கும் ராம் சரண், மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பிரபலத்தின் திடீர் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை வருகை குறித்த செய்தி அவரது ரசிகர்களைச் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், அவர் நலமுடன் திரும்பி வருவது குறித்த செய்தி ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: மீண்டும் தாம்பரத்திற்கு மாற்றப்படும் விரைவு ரயில்கள்!
