spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை சம்யுக்தாவின் ஆதிசக்தி... தனுஷ் பட நடிகையின் புது முயற்சி...

நடிகை சம்யுக்தாவின் ஆதிசக்தி… தனுஷ் பட நடிகையின் புது முயற்சி…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தீவண்டி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான இப்படத்தில் டொவினோ தாமஸ் நாயகியாக நடித்திருப்பார். அப்படியே மலையாளம் பக்கம் சென்றவர், உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து, யமந்தன் பிரேமாகதா எனும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் அடுத்து சுயம்பு படத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார். நிகில் சித்தார்த் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில், நடிகை சம்யுக்தா, புதிய அறிவிப்பு ஒன்றை வௌியிட்டார். அந்த பதிவில், ஆதி சக்தி பிறந்தநாளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய முயற்சியாக இதை தொடங்குகிறேன். இந்த புனிதமான பயணம் குறித்து, விரைவில் கூடுதல் தகவல்களை பகிர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ