Homeசெய்திகள்சினிமாஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

-

- Advertisement -
கவின் நடித்துள்ள ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

மணிகண்டன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இதில் அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவின் அடுத்ததாக, ஸ்டார் மற்றும் கிஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இளன் இதற்கு முன்பாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார் குறிப்பிடத்தக்கது. ஸ்டார் படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான விண்டேஜ் லவ் பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், படத்தின் அடுத்த பாடலான மெலோடி சில நாட்களுக்கு முன் வௌியானது. இதில் கவின் பெண் வேடத்தில் கலக்கி இருப்பார். சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்டார் படத்திலிருந்து ஜமிக்கி என்ற பாடல் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டார் திரைப்படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ