spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்!

-

- Advertisement -

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருக்கு பாலிவுட் சினிமாவை தாண்டியும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதேசமயம் இவர் அடுத்தடுத்த வெற்றி படங்களையும் கொடுத்து தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டங்கி போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தபடியாக ஷாருக்கான் ரஜினியின் கூலி படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் ஒரு சில காரணங்களால் ஷாருக்கான் கூலி படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்!

we-r-hiring

மேலும் கொல்கத்தா நைட்ரைட்ஸ் அணியின் உரிமையாளராக வலம் வரும் ஷாருக்கான் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக், நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ஷாருக்கான் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாருக்கான் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஷாருக்கானின் மேனேஜரும் ஷாருக்கான் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

MUST READ