நடிகர் தனுஷ் ராயன் படத்தை முடித்துவிட்டு தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு குபேரா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா கலந்து கொண்டுள்ளதாகவும், ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த மாத இறுதிக்குள் குபேரா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் என்று சமூக வலைதளங்களில் புதிய அப்டேட் உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில் குபேரா படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -