spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:இந்தியாvsஅயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:இந்தியாvsஅயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

-

- Advertisement -

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் இந்தியாvsஅயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் மோதும் இந்திய அணியானது வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

MUST READ