spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசொகுசு கப்பலில் அம்பானி கொடுத்த விருந்து... நடிகை ஜான்வி கபூர் பங்கேற்பு...

சொகுசு கப்பலில் அம்பானி கொடுத்த விருந்து… நடிகை ஜான்வி கபூர் பங்கேற்பு…

-

- Advertisement -
இந்தியாவின் பெரும் பணக்காரரும், ஆசியாவின் நட்சத்திர முகமுமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான இவருக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்களும், ஈஷா அம்பானி என ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு நிச்சயம் நடைபெற்று முடிந்தது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.

இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. ஜாம் நகரில் 3 நாள் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. இதில் பங்கேற்ற பிரபல நடிகை ஜான்வி கபூர், கப்பிலில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது டிரெண்டாகி வருகிறது. நிகழ்ச்சியில் ஜான்விகபூர் காதலன் ஷிகர் பகாரியாவுடன் நடந்து வந்த வீடியோவும் வெளியானது.

MUST READ