- Advertisement -
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்டவுன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
https://x.com/i/status/1799677580909715905

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட் சினிமாவுக்கும் அறிமுகமானார். பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி அடுத்தடுத்து நடித்து வந்தார். கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்களை வெகுவாக் கவர்ந்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பரதா என்ற திரைப்படத்தில் அனுபமா நடித்திருக்கிறார். அடுத்து, தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.



