spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷின் 50வது படம் 'ராயன்'...... புதிய பாடல் வெளியீடு!

தனுஷின் 50வது படம் ‘ராயன்’…… புதிய பாடல் வெளியீடு!

-

- Advertisement -

தனுஷ் நடிக்கும் ராயன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷின் 50வது படம் 'ராயன்'...... புதிய பாடல் வெளியீடு!தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படம் வருகின்ற ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

we-r-hiring

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணி அளவில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ராயன் ரம்பிள் எனும் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017 வெளியான ப. பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவதாக தனுஷின் உள்ள ராயன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

MUST READ