இந்தியன் 2 படம் குறித்து ரசிகர்களின் விமர்சனம்.
கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. அதன்படி சங்கர், கமல் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்களும் ஆவலுடன் படத்தை காண திரண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சி திரையிடப்பட்ட நிலையில் பெங்களூரு, மும்பை போன்ற மற்ற பகுதிகளில் அதிகாலையிலேயே படமானது திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 படம் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

அதாவது இயக்குனர் சங்கர் வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார் என்றும் இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் இந்தியன் 2 அமையவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் இந்தியன் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையை போல் இந்தியன் இரண்டாம் பாகத்தில் அனிருத்தின் இசை படத்திற்கு கை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். கதை, திரைக்கதை, மேக்கிங் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும் சில இடங்களில் கமல்ஹாசன் தான் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிளைமாக்சில் வரும் சண்டைக்காட்சி ஒன்று மட்டும் ஆறுதல் தருவதாகவும் மேலும் படத்தில் எந்த ஒரு கிரியேட்டிவ்வும் இல்லை எனவும் கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யாவிற்கு ஸ்கோப்பே இல்லை என்றும் கமெண்ட் செய்துள்ளனர். மொத்தத்தில் இயக்குனர் சங்கர் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தங்களது பதிவில் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து தாத்தா கதற விட்டதோடு
மட்டுமல்லாமல் தெறித்து ஓட விட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.


