HomeBreaking News காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

 காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

-

- Advertisement -

​”ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் காவிமயமான சிந்தனைகளோடு இருந்த என்னை, பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து கருப்புமயமாக மாற்றியவர் தந்தை பெரியார் தான்; ஆகவே, எனது இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்குகிறேன்” என்று எழுத்தாளர் நலங்கிள்ளி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

​அவர் எழுதிய புதிய புத்தகம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தரப்பில் இருந்து வரும் எதிர்ப்புகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தன் மீதான விமர்சனங்களுக்குக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

we-r-hiring

​”காவி டூ கருப்பு”: தந்தை பெரியார் தந்த மாற்றம்
​செய்தியாளர் சந்திப்பில் பேசிய எழுத்தாளர் நலங்கிள்ளி, தனது சித்தாந்த மாற்றம் குறித்தும், இந்த நூல் உருவானதன் பின்னணி குறித்தும் பகிர்ந்துகொண்டார், ​”நான் ஒரு காலத்தில் காவிமயமான சித்தாந்தத்தோடுதான் உலா வந்தேன். ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்த என்னை, அந்தப் பாதையிலிருந்து மீட்டு, பகுத்தறிவுப் பாதையான கருப்புமயத்திற்கு மாற்றியவர் தந்தை பெரியார். அவரது கொள்கைகளும் எழுத்துகளுமே என்னை முழுமையாக மாற்றின. அதனால்தான், இந்த நூலை தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன்.”

 காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

​”படிக்காமல் தடை கேட்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது”
​தொடர்ந்து தனது புத்தகத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் தடை கோரிக்கைகள் குறித்து அவர் பேசுகையில், ​”ஒரு புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை முழுமையாகப் படித்துப் பார்க்காமல், வெறும் தலைப்பை மட்டுமே படித்துவிட்டு அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோருவது அப்பட்டமான கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஜனநாயக நாட்டில் மாற்று கருத்துக்களை முன்வைப்பதற்கும், விவாதிப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ​எழுத்துகளையும் கருத்துக்களையும் தர்க்க ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, சகிப்புத்தன்மையின்றி தடை கோருவது முறையானது அல்ல” என்று எழுத்தாளர் நலங்கிள்ளி தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“சமூக நீதித் துறை என்ற பெயரை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்aகை

MUST READ