HomeBreaking Newsதனுஷ் ரசிகர்களே தயாரா? ... 'குபேரா' இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறிச்சாச்சு!

தனுஷ் ரசிகர்களே தயாரா? … ‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறிச்சாச்சு!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷ் ரசிகர்களே தயாரா? ... 'குபேரா' இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறிச்சாச்சு!

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர D55, D56 போன்ற படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தனுஷின் 51 வது படமான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து முதல் பாடலும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படமானது அடுத்த மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1ஆம் தேதி சென்னை, சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொண்டுள்ளது.

MUST READ