spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsமாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் கமல் - சிம்பு .... மிரட்டலான 'தக் லைஃப்'...

மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் கமல் – சிம்பு …. மிரட்டலான ‘தக் லைஃப்’ ட்ரைலர் வெளியீடு!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி உள்ளது.மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் கமல் - சிம்பு .... மிரட்டலான 'தக் லைஃப்' ட்ரைலர் வெளியீடு!

கமல்ஹாசன் – சிம்பு கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் கமல் – சிம்புவுடன் இணைந்து திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (மே 17) இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் சிம்பு, கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக காட்டப்படுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிம்பு, கமல்ஹாசனின் இடத்தை பிடிக்க நினைக்கிறார்.

we-r-hiring

அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் காட்சி காட்டப்படுகிறது. ட்ரைலரை பார்க்கும்போது இருவருக்குமான ஆக்ஷன் காட்சிகள் அதகளமாக இருக்கும்போல் தெரிகிறது. நடிகை திரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இது தவிர வருகின்ற மே 24ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ