விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்ஐகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி- நயன்தாரா நடிப்பில் நானும் ரௌடி தான் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதே சமயம் இந்த படத்தில் இருந்து ‘தீமா தீமா’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக வளர்ந்துள்ளது. இதற்கிடையில் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 செப்டம்பர் 18ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.