வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரக்சன், அபிராமி, ரோகினி, கிஷோர்
உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைக்க கதிர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாஸ் காட்டி இருந்தார். அதன்படி போலி என்கவுண்டர் பற்றியும் கல்விமுறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.