Homeசெய்திகள்உதயநிதியின் மாமன்னன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ ஆர் முருகதாஸ்

உதயநிதியின் மாமன்னன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ ஆர் முருகதாஸ்

-

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மாமன்னன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘மாமன்னன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட கமல், சிவகார்த்திகேயன், சூரி, பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் “மாமன்னன் ஒரு பெரிய புரட்சிகரமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். துப்பாக்கி, ஏழு அறிவு படங்களின் வெளியீட்டிற்கு உதவிய உதயநிதிக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் மாமன்னன் படத்தில் தான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் எப்போதுமே அவர் இயக்கும் படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிவிடுவார். அந்த வகையில் தற்போது அவர் மாமன்னன் படத்தில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ