spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாமன்னன் தான் கடைசி படம்....உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

மாமன்னன் தான் கடைசி படம்….உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட கமல், சிவகார்த்திகேயன், சூரி, பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அமைச்சரான பின்பு படம் நடிப்பது சரியாக இருக்காது. எனவே இதுதான் என்னுடைய கடைசி படம். பல்வேறு வேலைகளுக்கு நடுவில் தான் இந்த படத்தின் டப்பிங் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கியுள்ளேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன். அதன் பின் தெரியவில்லை. அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அடுத்து படம் நடித்தால் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தான் நடிப்பேன் என அவரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன்” என்று  கூறியுள்ளார்.

MUST READ