spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி!  ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்! 

ரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி!  ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்! 

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் அவர்களை காப்பாற்றி வருவதாக  பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

திமுக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்க குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எம்எல்ஏக்கள் வார்டு வார்டுகளாக செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவிலேயே முதலில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார்கள். பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தினார்கள். தற்போது செயற்குழு கூட்டத்தையும் நடத்திவிட்டார்கள். அவர்களுக்கு என்ன என்றால் பாஜக கூட்டணியை கீழ் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலும், கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் அவர்களை சமாதானம் செய்ய வேண்டி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

திமுகவை பொறுத்தவரை அவர்கள் தேர்தல் மோடில்தான் உள்ளனர். அவர்கள் பூத் கமிட்டி எல்லாம் போட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பூத் ஏஜெண்டுகள் தெரு தெருவாக சென்று மக்களை சந்திக்கும் நிகழ்வுகள் போய் கொண்டிருக்கிறது. எப்போதும் ஆளுங்கட்சி பலவிதமான சாதனைகளை எடுத்துச்சொல்லி பாசிட்டிவ் ஆன வாக்குகளை பெற வேண்டும். ஆனால் அதற்கு நெகட்டிவ் ஆன விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, நிறைவேறாத வாக்குறுதிகள் போன்றவை இருக்கத்தான் செய்யும். அதை எதிர்க்கட்சிகள் பேசுகிறபோது 3 சதவீதம் வாக்குகள் வரை எதிர்க்கட்சிகளுக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன. அதை எல்லாம் மீட்டு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. திமுகவில் வேலைகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்.

senthilbalaji

 

திமுகவினர் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவது ஒன்றும் முதலமைச்சருக்கு புதிதானது இல்லை. அமைச்சர்கள் ஏதாவது ஒன்று பேசி வம்பில் மாட்டிவிடக் கூடாது என்பது தான். அதுதான் முதலமைச்சரின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஏற்கனவே 2 அமைச்சர்கள் வெளியே போய்விட்டனர். பாஜக, பல அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத் துறையினரை ஏவி விடுவார்கள். அவற்றை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இல்லம்தோறும் மருத்துவம் திட்டம் பெரிய அளவில் பெற்றி பெற்றுள்ளதாக சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் திமுக வாக்குகளாக மாற்ற வேண்டும். அதைதான் முதல்வரும் எதிர்பார்க்கிறார். அதனால் தான் கட்சியினரை வேகப்படுத்துகிறார். திமுக அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் சாதனைகளை வாக்குகளாக மாற்ற வேண்டிய விஷயம் உள்ளது. அதனால்தான் மக்களை போய் பாருங்கள் என்கிறார்.

முதல்வர் அறட்டல், மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று சொல்கிறார். அமலாக்கத்துறை வாயிலாகத்தான் இதை செய்கிறார்கள். செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பார்த்தோம். தற்போது கே.என்.நேரு போன்றவர்கள் சோதனை வளையத்திற்குள் உள்ளனர். டெல்லி அரசாங்கத்தை தேர்தலுக்கு முன்பு எப்படி சேதப்படுத்தினார்களோ. அதுபோன்று தமிழ்நாட்டில் திமுக அரசை சேதப்படுத்த விரும்புகிறார்கள். நீதிமன்றங்கள் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுவதை அரசியலுடன் ஒப்பிட முடியாது. முந்தைய அதிமுக ஆட்சிகளில் போடப்பட்ட வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் தங்கம் தெனனரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி போன்றவர்கள் மீது மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கைக தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

நீதிமன்ற வழக்குகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் எல்லாம் சேர்ந்து திமுக ஆட்சியை ஊழல் ஆட்சியாக கட்டமைக்கிறார்கள். அதுதான் திமுக எதிர்கொள்ள வேண்டிய சவாலாகும். திமுக டிபென்ஸ் ஆட வேண்டிய சூழலில் உள்ளது. அதிமுக மீது ஊழல் வழக்குகள், கோடநாடு வழக்கு, டெண்டர் முறைகேடு, குட்கா வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்குகள் உள்ளன. அவற்றை விரைவுப்படுத்தி அதிமுவை டிபென்ஸ் பொஷிஷனில் வைக்காமல் திமுக டிபன்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அங்குதான் திமுக ஆட்சி சற்று விரைவாக செயல்பட்டிருக்கலாம். அந்த வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குகள் நடைபெறாததற்கு காரணம் ஆளுநர்.

அதிமுகவினர் பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறார்களோ இல்லையோ. ஆனால் தங்கள் மீது வழக்குகள் வராமல் இருக்க டெல்லியில் போய் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வளவு எப்ஐஆர் உள்ளபோது அமலாக்கத்துறை ஏன் அந்த வழக்குகளை பார்ப்பது இல்லை. வேலுமணி மீதே 3 வழக்குகள் இருக்கின்றன. சிறுபான்மை மக்கள் காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள். ஜோசப் விஜய் என்பதால் சிறுபானமை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

ஜே.பி.நட்டா, தமிழக வருகை என்பது கண்டிப்பாக வேறு திட்டங்கள் இருக்கும். ரகசியமாக அதிமுக தலைவர்களை சந்தித்து பேசுவார். வெளிப்படையாக சந்திக்க மாட்டார்கள். அதிமுக – கூட்டணி தொடர்பாக இன்னும் முழுமையாக பேச வேண்டும். அமித்ஷா கூட்டணி ஆட்சி என சொல்லிவிட்டு போய்விட்டார். நட்டாவிடம் போய் இவர்கள் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு முன்னதாக யாரும் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் அது  தமிழ்நாட்டில் எடுபடாது என்று அதிமுகவினர் பயப்படுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ