சச்சினின் சாதனைய முறியடிப்பாரா? – விராட்கோலி?
சச்சின் : இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுளாகவே வணங்கப்படும் சச்சின் டெண்டுல்கரின், ஆரம்பகாலம் அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை.
இந்தியாவில் முதன் முதலாக 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் ‘பால் பாய்’-ஆகவே அவர் இருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையோடு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அவர், முதலில் நிராகரிப்புகளையே சந்தித்தார். முதலில் எம். ஆர். எப் வேகப்பந்து அகாடமிக்கு வந்த அவர் ஆஸ்த்ரேலியா வீரர் டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டார். அவரது உயரம் காரணமாக தொடர் நிராகரிப்புகளை சந்தித்த சச்சின் தான், பின்னாளில் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுத்தார்.
1989-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் மூலமே தனது முதல் சர்வதேசப் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார் சச்சின். அன்றிலிருந்து இன்று வரை சச்சினின் சாதனை பலருக்கும் எட்ட முடியாத ஒரு மைல்கல்லாகவே இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் எடுத்த ரன்கள் 34,357. சதங்கள் 100. டெஸ்ட் வரலாற்றில் சச்சின் அதிகப்பட்ச ரன்கள் 15,921, அதிகபட்ச சதங்கள் 51 ஆகும்.
ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த ஒரே பேட்ஸ்மேனும் சச்சின் தான். 1997, 1999, 2001, 2002, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் 1000 ரன்களுக்கும் மேலாக சச்சின் ஸ்கோர் செய்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் அதிகப்பட்ச ரன்கள் 18,426 .
ஒரு தொடக்க ஆட்ட வீரராக சச்சினின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அவர் ஸ்கோர் செய்த அதிகப்பட்ச ரன்கள் 15310.
டெண்டுல்கர் விளையாடி சதம் அடித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 78.43 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது.
பயணத்தின் முடிவு:
11வது வயதிலேயே கிரிக்கெட்டில் கால்பதித்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 2013ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
விராட்கோலி:
3ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராட்கோலி சதம் விளாசியுள்ளார் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தனது ஆட்டத்தினை தொடர்ந்து விராட்கோலி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆட்டத்தை தொடங்கினர், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்தர ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின், விராட்கோலி, ஸ்ரீகர் பரத் இருவரும் இணைந்து விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தியுள்ளார்கள், சிறப்பாக விளையாடிய விராட்கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இது இவருடைய 28வது சதமாகும், விராட்கோலி கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான நடைப்பெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் தனது சதத்தினை பதிவு செய்திருந்தார், அதன் பின் மார்ச்-12-2023 ஆஸ்த்ரேலியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.
விராட்கோலியின் சதம் பட்டியல்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விராட்கோலியின் இன்றைய சதம் 28 ஆகும், அனைத்து வகையான சர்வதேச போட்டியில் இந்த சதம் அவருடைய 75-வது சதமாகும்
இன்றைய போட்டியில் 241 பந்துகளில் விராட்கோலி சதமடித்துள்ளார்.
289 பந்துகள் (இங்கிலாந்து, 2012)
241 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2023)
214 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2018)
199 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2012)
199 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2013)
சர்வதேச போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் எடுத்தவரின் விவரங்கள்:
சச்சின் டெண்டுல்கர் – 20 சதங்கள் (ஆஸ்திரேலியா)
டான் பிராட்மேன் – 19 சதங்கள் (இங்கிலாந்து)
சச்சின் டெண்டுல்கர் – 17 சதங்கள் (இலங்கை)
விரட்கோலி -16 சதங்கள் (ஆஸ்திரேலியா)
விரட்கோலி -16 சதங்கள் (ஆஸ்திரேலியா)
இதுவரை 108 போட்டிகளில் விளையாடியுள்ள விராட்கோலி 8358 ரன்கள் குவித்துள்ளார் அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும், அவரது பேட்டிங் சராசரி 48.88 ஆகும்.
7 இரட்டை சதங்கள், 28 சதங்கள், 28 அரை சதங்கள், 936 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.