spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவெளிவரும் விஜயின் ரகசியங்கள்! முடிவு செய்த அதிமுக, திமுக! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

வெளிவரும் விஜயின் ரகசியங்கள்! முடிவு செய்த அதிமுக, திமுக! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

மெர்சல் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்து பிரச்சினையை சரி செய்தார். தற்போது அதிமுகவை விஜய் விமர்சிப்பதால் அவர் மீது அதிமுக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய்க்கு எதிராக அதிமுக விமர்சனங்களை தீவிரப்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை விதித்த அபராதம், கரூர் விவகாரத்தை கையில் எடுத்து கடுமையாக பேசி வருகிறார்கள். அதிமுக, தவெக இடையே போட்டி என்பது கிடையாது. அதிமுக, திமுகவுக்கு எதிராக தான் போட்டியிடுகிறது. குறுக்கே விஜய் புகுந்து, அவர்களுடைய இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார்கள். அதிமுக இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டால், அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். எனவே அவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி அமைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது.

தற்போது டிடிவி, அன்புமணி போன்றவர்களை கூட்டணிக்கு உள்ளே கொண்டுவந்துவிட்டனர். ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி 180 தொகுதிகளுக்கு போய்விட்டார்கள். அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வில் மனுக்கள் மீதான பரிசீலனை போய்க் கொண்டிருக்கிறது.  அதேநேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்ததும், தவெகவினர் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் போட்டு தர்மஅடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை தவெக முன்னால் ஓடும் திமுகவை பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. அதிமுக ஓடுவதற்கு ஆயத்தமாகி வந்தது. தற்போது அதிமுக ஓடத் தொடங்கியதும், இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நாம் தமிழர் கட்சி அமைதியாக இருந்தது. தேனியில் அவர்களிடம் சென்று வம்பு இழுத்தீர்கள். அடியும் வாங்கிக்கொண்டு ஊரையும் விட்டு ஓடிவிட்டீர்கள். திருச்செங்கோட்டில் அருண்ராஜ், ராஜ்மோகன் போன்றவர்கள் கூட்டங்களில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உள்ளது. ஆனால் மற்றொருபுறம் ரசிகர்கள் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளனர். ரசிகர்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான் கரூரில் துயரம் நிகழ்ந்தது. கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் சேர்வது விஜய்க்கு நஷ்டம்தான். ஆனால் கூட்டம் சேர்ப்பது தான் மாஸ் என்று இவர்கள் நினைக்கிறார்கள். எந்த வித நெறிமுறையும் இல்லாமல் இருப்பவர்களை அதிமுக அடிக்கத்தான் செய்வார்கள். செங்கோட்டையன் தவெகவுக்கு தற்போது 42 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொல்கிறார். தமிழ்நாட்டில் வாக்களிப்பதே 70 சதவீதம் பேர்தான். தவெகவுக்கு ஆதரவாக நிறைய பேர் மூளை சலவை செய்கிறார்கள். திமுக, அதிமுக காலி. இனிமேல் நாங்கதான் என்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உண்மை அவர்களுக்கு கசக்கும்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
விஜய் மற்றும் எம்.ஜி.ஆர்.

 

தவெகவுக்கு சென்னையை தாண்டி தேவையான வாக்கு வங்கியோ, உட்கட்டமைப்போ, வசீகரமோ கிடையாது. இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு சரிசெய்து வாக்குகளை அதிகரித்தால் நல்லது. விஜய், எம்ஜிஆரின் லெகசியை எடுத்துக்கொள்ள முயற்சித்தார். அதனால் அதிமுகவினர் அடிக்கிறார்கள். விஜய்க்கும், டிடிவி தினகரனுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் அவர் விஜயை அடிப்பதற்கு காரணம் எம்ஜிஆர் அவருக்கும் சொந்தம். விஜய் தன்னுடைய வீட்டில் எம்ஜிஆர் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளாரா? அவர் சிலைக்கு போய் மாலை போட்டிருக்கிறாரா? அதிமுக, விஜய் வேண்டாம் என்கிற முடிவுக்கு போனதால் தான் இந்த பேய் அடி அடிக்கிறார்கள். இதை செய்யத் தொடங்கியதும் அதிகமாக செய்திகளில் வரத் தொடங்கிவிட்டது. பிரச்சாரம் போக போக, வேட்பாளர் போக போக களம் திமுக Vs அதிமுக என்று மாறிவிடும்.

'வேட்டையன்' படத்திற்கு எதிராக கிளம்பிய சர்ச்சை..... கொந்தளிக்கும் கோவில்பட்டி மக்கள்!

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, மெர்சல் பட வெளியீட்டின்போது பிரச்சினை வந்தபோது, விஜய் 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியை பார்த்ததாகவும், அவர் படத்திற்கு விலங்குகள் நல வாரிய தடையில்லா சான்றிதழ் உடனடியாக வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதற்காக வாழ் நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் விஜய் கூறியதாக சொல்கிறார். அதற்கு ஆதாரமாக விஜயுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் காட்டியுள்ளார். விஜய் அதிமுகவை எதிர்த்து பேசுவார் என்று அவர்களுக்கு தெரிந்து இருந்தால் இன்னும் பெரிய பெரிய படங்களை எடுத்திருப்பார்கள். இதுமட்டுமின்றி மேலும் ஒரு சில நடிகைகளுக்காக பேசி வரிகளை குறைக்க வைத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை சொல்லவில்லை. ஆனால் கட்சியினர் சும்மா விடுவார்களா?

தவெக-வில் விருப்ப மனு விற்பனையின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலால் பனையூர் பகுதி மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். பனையூர் பகுதியில் தான் சீமான், அண்ணாமலை, அன்புமணி போன்றவர்கள் உள்ளனர். அவர்களால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? விருப்பமனுக்களை தகுதியின் அடிப்படையில் சிலருக்கு கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் கொடுத்தால் எப்படி? அவர்கள் நடத்துவது தான் கட்சி. இதுதான் முறை என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ