Homeசெய்திகள்கட்டுரை"உதயநிதி கைது: நீதிமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி!" - திசைதிருப்பும் மலிவு அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட...

“உதயநிதி கைது: நீதிமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி!” – திசைதிருப்பும் மலிவு அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட பத்திரிகையாளர் செந்தில்!

-

- Advertisement -

காவிரி நீர் விவகாரம் மற்றும் அரசின் படுதோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கும், அதிரட்டுக் கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் படுதோல்வி அடைந்துள்ளதாக ஈ தமிழ் நியூஸ் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான செந்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ‘ஈ தமிழ் நியூஸ்’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில் அவர் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அதிரடியான பல உண்மைகளைப் போட்டுடைத்துள்ளார்.

உதயநிதி

we-r-hiring

காவிரித் தோல்வியை மறைக்கப் பாயும் அவசரக் கைது:

தஞ்சையில் நடைபெற்ற டெல்டா விவசாயிகளுக்கான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியதை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் மீது அவசரகதியாக ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது ஆளுங்கட்சி. ஆனால், நீதிமன்றத்தில் ஆளுங்கட்சி தரப்பு வழக்கறிஞர்களே “நாங்கள் ரிமாண்ட் செய்யவில்லை; விசாரணைக்காக மட்டுமே அழைத்து வந்தோம்; ஸ்டேஷன் பெயிலில் விடுவிப்போம்” என்று வாக்குமூலம் அளித்திருப்பது, இவர்களின் அரசியல் பலவீனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக செந்தில் விமர்சித்துள்ளார்.

தவறான ஆலோசகர்களின் மலிவு அரசியல்:

தமிழகத்தின் அரசியல் நிலவரம் என்னவென்றே தெரியாமல், எதிர்க்கட்சித் தலைவரைச் சிறையில் அடைத்துவிடலாம் என்ற மிரட்டல் அரசியலில் இறங்கியுள்ள ஆளுங்கட்சியின் சட்டத்துறை மற்றும் அதன் ஆலோசகர்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். வார இறுதி நாட்களில் திரைப்பட வசூலைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் காய்களை நகர்த்துபவர்கள், நீதிமன்றங்களின் நடைமுறைகளை அறியாமல் இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இறுதியில் அவர்களுக்குத் மிகப்பெரிய மைனஸ் ஆகிவிடும் என்பதை உணராதது பரிதாபத்திற்குரியது.

சட்டமன்றத்தை எதிர்கொள்ளத் திராணியில்லாத திசைதிருப்பல்:

நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காவிரி விவகாரம், மின்வெட்டு மற்றும் நிர்வாகச் சீரழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் திராணியில்லாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திடீர் கைது நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இத்தகைய மலிவான யுக்திகளால் எதிர்க்கட்சித் தலைவரை மேலும் தேசிய அளவில் உச்சத்திற்கு உயர்த்தியுள்ளதே தவிர, அரசை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

MUST READ