Homeசெய்திகள்கட்டுரை‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ - அரசியல் விமர்சகர்...

‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ – அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் ஆவேசம்!

-

- Advertisement -

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் ‘கண்துடைப்பு நாடகம்’ என்று அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வள்ளம்

we-r-hiring

‘அரன் செய்’ ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் முக்கிய விவரங்கள்:

  • எம்பிக்களே இல்லாத கட்சியின் கூட்டம்: சொந்தக் கட்சிக்கு ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது மிகப்பெரிய முரண்பாடு. தமிழகத்தின் 57 எம்.பி-க்களில் 20 பேர் கூட இதில் பங்கேற்கவில்லை.

  • திமுகவின் வரலாற்றுப் பின்னணி: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்து நின்று போராடிய வரலாறு திமுகவுக்கு உண்டு. தற்போது வரைவு மசோதாவே வராத நிலையில் அவசரமாகக் கூட்டம் கூட்டுவது தேவையற்றது.

  • டெல்டா விவசாயிகள் புறக்கணிப்பு: காவிரி நீர் வரத்தின்றி குறுவை சாகுபடி பொய்த்துப் போய் டெல்டா விவசாயிகள் தவிக்கும் நிலையில், அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு இக்கூட்டத்தை நடத்துவது நியாயமில்லை.

  • கூட்டணிக் கட்சிகளின் மௌனம்: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் தமிழகத்திற்குத் தண்ணீர் பெற அழுத்தம் கொடுக்கத் தவறியதைக் சுட்டிக்காட்டிய அவர், விளம்பரங்களைத் தாண்டி சட்டப் போராட்டமே தேவை என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 50-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது: சென்னை சென்ட்ரலில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

 

MUST READ