Homeசெய்திகள்கட்டுரைஜனநாயகன் வருமா? வராதா? கோர்ட்டில் நடந்த A to Z! பாஜகவுக்கு பம்மி பயக்கும்...

ஜனநாயகன் வருமா? வராதா? கோர்ட்டில் நடந்த A to Z! பாஜகவுக்கு பம்மி பயக்கும் விஜய்? வாஞ்சிநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

ஜனநாயகன் படத்திற்கு பாஜக வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழ் வழங்காத நிலையில், விஜய் ஒரு அரசியல் தலைவராக மக்களை திரட்டி போராடி இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜனவரி 9ல் வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து அன்று மாலையே சென்சார் போர்டு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு வாங்கியது. இதற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியபோது, உயர்நீதிமன்றத்தை நாடி தீர்வு காண அறிவுறுத்தியதுடன், 20ஆம் தேதியே வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டனர். அதன்படி வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில், நீதிபதி பி.டி. ஆஷா உரிய கால அவகாசம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

நடிகர் விஜய் மற்றும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்டுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், சென்சார் போர்டு காரணம் இன்றி இழுத்தடிப்பதாக வாதிடப்பட்டது. அப்போது, விஜய் தரப்பிடம் தனி நீதிபதி ஒரே நாளில் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  சென்சார் போர்டுக்கு உரிய கால அவகாசம் வழங்கி இருக்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்புகள் வழங்க வாய்ப்பு உள்ளன. முதலாவது நீதிபதி பி.டி.ஆஷா மத்திய அரசு தரப்புக்கு உரிய அவகாசம் வழங்காமல் தீர்ப்பளித்துள்ளதாகவும், எனவே அந்த உத்தரவை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் அவரே சென்சார் போர்டுக்கு உரிய கால அவகாசம் வழங்கி விசாரிக்க வேண்டும் என்று சொல்லலாம். அப்படி போனால் எத்தனை வாரங்களில் விசாரணைக்கு வரும் என்பது தெரியாது.2வது தனி நீதிபதி உத்தரவை ஏற்று சான்றிதழ் வழங்க உத்தரவிடலாம். இறுதியாக ரிவியூ கமிட்டிக்கு அனுப்பி முடிவு செய்யலாம் என உத்தரவிடலாம். எனவே ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதத்திற்குள்ளாக வர வாய்ப்புகள் கிடையாது.

பாஜக, விஜயை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கொடுக்கும் நெருக்கடி இது என்பது எல்லோருக்கும் தெரியும். முன்பு தலைவா படத்தின் வெளியீட்டின் போது ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தார்கள். தற்போது மோடியும், அமித்ஷாவும் நெருக்கடி தருகிறார்கள். தங்களின் பவர் என்ன? என்று மோடி, அமித்ஷா விஜய்க்கு சொல்கிறார்கள். அதற்கு சிபிஐ, ஜனநாயகன் படம் என்று இரண்டு கருவிகளை பயன்படுத்துகிறார்கள். வெளிப்படையாக பாஜக விஜயை மிரட்டுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வராவிட்டால் அந்த படம் இந்நேரம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். ஜனநாயகன் பட விவகாரத்தில் ஒரு நடிகராக படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரச்சினை வரக்கூடாது என்று விஜய் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கட்சியின் தலைவரான பிறகு படமே நடித்திருக்கக் கூடாது. அதையும் தேர்தலுக்கு முன்னதாக வெளியிட முயற்சித்திருக்கக் கூடாது. தற்போது அவர்கள் செய்திருப்பது முட்டாள்த்தனமான வேலையாகும். அப்படி வெளியிடும்போது அதை எதிர்கொள்ளவும் அரசியல் ரீதியாக தயாராக இருந்திருக்க வேண்டும்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

ஜனநாயகன் பட பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி போன்றவர்கள் பாஜகவை கண்டித்துள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் போன்ற வன்முறையை தூண்டுகிற படத்திற்கு எல்லாம் பாஜக அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விஜய்க்கு வேண்டும் என்றே அனுமதி வழங்கவில்லை. படத்திற்கு பிரச்சினை வருகிறபோது, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக விஜய் மக்களை திரட்டி பாஜகவுக்கு எதிராக போராடி இருக்க வேண்டும். ஆனால் அவர் வெளியே வராமல் பனையூரிலும், கேரவனுக்குள்ளும் இருந்தால் எப்படி அரசியல் கட்சி தலைவராவார்? அரசியல் ரீதியாக தன்னை நிரூபிக்காத ஒருவரை எப்படி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள். கட்சியில் பல வருடங்களாக உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். ஆதவ் அர்ஜுனாவுக்கும், விஜய் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? லாட்டரி பணம் இருப்பதால் முக்கியமான பொறுப்பை வாங்கிவிட்டார். ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த சி.டி.நிர்மல்குமார், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் போன்றவர்கள் விஜயிடம் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூர் சம்பவம் என்பது விஜய்க்கான கள பரீட்சையாகும். அதில் அவர் தோற்றுவிட்டார். கரூர் சம்பவத்தின்போது விஜயை பார்க்க வந்த 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த மரியாதையும் செலுத்தவில்லை. இந்த வழக்கை தமிழக அரசு நடத்தியிருந்தால் விஜய்க்கு அரசியல் ரீதியாக லாபம் கிடைத்திருக்கும். ஆனால் சிபிஐ விசாரணைக்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டனர். தற்போது விஜய் குடுமி மோடி அமித்ஷாவிடம் உள்ளது. அவர்கள் ஆட்டும்படி விஜய் ஆடுவார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராடியதற்காக என் மீது 32 வழக்குகள் போடப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் என்னுடன் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவற்றை எல்லாம் தாண்டி வெளியில் வந்து, சிபிஐ வழக்கு தொடர்ந்தவர்களுக்காக வாதாடி வருகிறோம். ஆனால் ஒரு அரசியல் கட்சி தலைவரான விஜய், தன்னுடைய சொந்த பிரச்சினைக்காக மௌனமாக இருக்கிறார். தனது பொருளாதாரத்தை மையப்படுத்தி, கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருக்கும் ஒருவரை அரசியல் தலைவர் என்று எப்படி சொல்வது? விஜய், ஒரு அரசியல் தலைவராக அவருக்கு மட்டுமின்றி எந்த நடிகருக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டும்.

பாஜக அரசியல் ரீதியாக நெருக்கடி தரும்போது விஜய் மட்டுமின்றி புஸ்ஸி ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் என்று யாரும் வாய்திறக்க வில்லை. விஜய் நடிகராக இருப்பதா? அல்லது அரசியல் தலைவராக இருப்பதா? என்று தற்போது முடிவு செய்ய வேண்டும். ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக அந்த கட்சி தொண்டர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்து அறிவிக்க வேண்டும். ரசிகர்கள், உங்கள் கட்சி தலைவரை நிர்பந்திக்க வேண்டும். உங்களுக்கு ஜனநாயக ரீதியாக அந்த உரிமையும், கடமையும் உள்ளது. உங்கள் கட்சியின் கொள்கை தலைவர்கள் இதைவிட ஆயிரம் மடங்கு செய்திருக்கிறார்கள். அதை ஒரு சதவீதமாவது செய்யுங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ