தமிழகத்தில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் கடித்து பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்காக இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.


இன்றைய முகாம் மற்றும் இலக்கு:
சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதுமட்டுமன்றி, இதனால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, சென்னையில் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்று தொடங்கி அடுத்த 75 வேலை நாட்களுக்குள் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
30 குழுக்கள் மூலம் தீவிரப் பணி:
அதன்படி, நாளொன்றுக்கு ஒரு குழு 100 நாய்கள் வீதம், மொத்தம் 30 குழுக்கள் மூலம் தினசரி 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டின் புள்ளிவிவரம்:
கடந்தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கிய முகாமில் மொத்தம் 1,47,545 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனடாவில் பரபரப்பு! குழந்தையால் முடங்கிய விமானம்.. குடும்பத்தையே தூக்கி வெளியே வீசிய நிறுவனம்!
