தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் 2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மஞ்சள் நிற புடவையில் தலையில் பால் குடத்துடன் 2000 பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஆனந்த வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முருக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன் ஆலயத்தில் மங்கல இசையுடன் வாணவேடிக்கைகள் முழங்க 2000 பெண் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் மயில் காவடியுடன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இறுதியாக முருகனுக்கு சிறப்பு அலங்காரமும் அனைவருக்கும் அன்னதானம் வழங்ப்பட்டது.