Homeசெய்திகள்சினிமா54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது!

54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது!

-

உலக அளவில் பிரபலமான திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் இந்த விழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது 54வது சர்வதேச திரைப்பட விழாவானது நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மொழி சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த விழாவில் கிட்டத்தட்ட 270 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் 10 சர்வதேச திரைப்படங்களும், 69 ஆசிய திரைப்படங்களும், இந்தியாவின் சார்பில் 89 திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான “மைக்கேல் டக்லஸ்” க்கு சத்திய ஜித்ரே வாழ்நாள் விருது வழங்கப்பட உள்ளது.54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது!

மேலும் ஓ டி டி தளங்களில் இருந்து பல வெப்சீரிஸ்களும் திரையிடப்பட உள்ளன. இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட படங்களாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய”காதல் என்பது பொதுவுடமை”, சம்யுக்தா விஜயன் இயக்கிய”நீல நிற சூரியன்” போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன.54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது!

மேலும் மெயின் ஸ்ட்ரீம் பிரிவில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 2, சுதிப்சோ சென் இயக்கிய “தி கேரளா ஸ்டோரி” போன்ற படங்களும் திரையிடப்பட உள்ளன. இந்த ஆண்டு முதன்முறையாக சிறந்த வெப் சீரிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நாடு முழுவதும் 10 மொழிகளில் இருந்து 32 வெப் சீரிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ